கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
முன்னதாக, பிக் பாஸ் 7வது சீசனக்கான ப்ரோமோ வெளியானது. ஆறு சீசன்களை தொடர்ந்து 7வது சீசனிலும் கமல்ஹாசனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
வழக்கம் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட இருக்கின்றனர். அதை ப்ரோமோவில் கமல்ஹாசனே கூறிவிட்டார்.இந்நிலையில் முன்னணி விஜய் டிவி காமெடியன் குரேஷி பிக் பாஸ் செல்வதை உறுதி செய்திருக்கிறார்.
அவர் இன்ஸ்டாவில் பிக் பாஸ் கமல் போஸ்டர் முன்பு நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் பிக் பாஸ் செல்வதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் எனரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!