விஜய் அரசியலில் அறிமுகமாகி தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அவர் சைக்கிள் ஓட்டி மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரித்தது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த பிரச்சாரத்தின் போது விஜய் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக, மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, “மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ.8,000 இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.” என தெரிவித்தார். மேலும், கடலில் சிறைபிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை, படகு பாதுகாப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
அதோடு, “கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, புதிய வீடுகள் கட்டித்தரப்படும்” எனவும் உறுதியளித்தார். இந்த அறிவிப்புகள் மீனவர் சமூகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
விஜய்யின் இந்த எளிமையான பிரச்சார முறை மற்றும் மக்கள் நல வாக்குறுதிகள், அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!