• Jan 27 2023

வாரிசு படத்தை தாறுமாறாக விமர்சித்த விஜய்யின் பெண் ரசிகைகள்..அப்படி நடந்தது என்ன..?

Listen News!
Aishu / 1 week ago
image

Advertisement

Listen News!

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர்  தான் தளபதி விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது.

அதாவது கதையின் படி பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் உள்ளார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே அப்பா பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருந்து வருகின்றார்கள். ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார்.

மேலும் ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை விஜய் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார்.வீட்டை விட்டு வெளியேறும் விஜய் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்து வருகின்றார்.இதன் பின்னர் ஒரு கட்டத்தில் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் சரத்குமார் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் சறுக்களை சந்திக்கிறார்.

இதன் பின்னர் இவரது 60ஆம் கல்யாணத்திற்காக விஜய் அவரது அம்மா மீண்டும் வீட்டிற்கு அழைக்கிறார். வீட்டுக்கு வரும் விஜய் இடம் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை சொல்லி தன்னுடைய குடும்பத்தையும் தொழிலையும் விஜய் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஆசைப்படுகிறார் சரத்குமார். மேலும் அந்த ஆசையை விஜய் நிறைவேற்றினாரா ? குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்ந்ததா ? சரத்குமார் இழந்த சாம்ராஜ்யத்தை விஜய் மீண்டும் நிலை நாட்டினாரா என்பது தான் இந்த படத்தின் கதையாக அமைகின்றது.

மேலும் இது போன்ற கதை தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு விஷயம் கிடையாது. சூரியவம்சம், வந்தா ராஜாவா தான் வருவேன், பூஜை போன்ற பல படங்களை கலந்து எடுத்தது போலத்தான் இந்த படத்தின் கதையும் அமைந்து உள்ளது.இருப்பினும் இந்த படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்று விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படியொரு நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த பெண் ரசிகர்கள் சிலர் இந்த படத்தை தாறுமாறாக விமர்சித்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண் என்றால் கணவர் எந்த தவறை செய்தாலும் அனுசரித்து செல்ல வேண்டுமா ? விஜய் எப்படி இந்த படத்தில் நடித்தார் என்று கழுவி ஊற்றி உள்ளார்கள்.எனினும் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வயசாக பரவி வருகிறது

துணிவுடன் போட்டி போட்டு வெளியான வாரிசு முதல் நாள் இந்தியாவில் 26 கோடியே 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 5 கோடி ரூபாயும், கேரளாவில் 3.5 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களில் இருந்து 1 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு துணிவு படைத்த விட 50 லட்சம் ருபாய் அதிகமாக வசூல் செய்த்தாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement