• Apr 23 2026

முத்துமலர் வேஷத்தைக் கலைத்து உண்மையை வெளிச்சம் போட்ட விஜய்.. அதிர்ச்சியில் குடும்பம்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலின் இன்றைய ப்ரோமோ அனைத்து இல்லத்தரசிகளும் எதிர்பார்த்த வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், தற்பொழுது வெளியான ப்ரோமோவில் முத்துமலரோட மகன் முத்து மலருக்கு போன் எடுத்து நானும் ராகுலும் பேசுறத விஜய் பார்த்திட்டார் என்கிறார்.


மேலும் விஜய் உங்களை தேடி வாறதுக்குள்ள முத்தையா அண்ணனோட பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புங்க என்கிறார். அதைக் கேட்ட முத்துமலர் ஷாக் ஆகுறார். அதைத் தொடர்ந்து இவங்க கிளம்புறதைப் பார்த்த விஜய் எல்லாரையும் வீட்டுக்கே மறுபடியும் கூட்டிக் கொண்டு போறார்.


அங்க வைத்து விஜய் முத்துமலர் மகனைப் பார்த்து உண்மையை சொல்லச் சொல்லுறார். பின் காவேரி குடும்பத்துக்கு முத்துமலர் சந்தானத்தோட மனைவி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கின்றார் விஜய். அதுமட்டுமல்லாது, முத்துமலரும் காவேரி அப்பாவை நான் பார்த்ததே கிடையாது.. பசுபதி தான் என்னை இங்க வந்து நடிக்க சொன்னான் என்கிறார்.

Advertisement

Advertisement