• May 07 2024

எலும்பும் தோலுமாக மாறிய விஜயகாந்த்... கைகளால் தாங்கி நிற்கும் மனைவி... பார்த்தும் கண் கலங்கிய ரசிகர்கள்...!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜய்காந்த். இவர் 'கேப்டன்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார். இவரின் கட்டான உடலமைப்பிற்கும், கம்பீரமான தோற்றத்திற்கும் என்றே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு. 

இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் பல படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வு எடுத்து வரும் விஜயகாந்த் இன்று தன் 71ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தற்போது தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ரசிகர்களை இன்று தன் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். 


அங்கு வந்த விஜயகாந்தின் உடைய தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் கண் கலங்கி உள்ளனர். அதாவது எலும்பும் தோலுமாக வந்த விஜயகாந்த்தை மனைவி, மற்றும் தொண்டர்கள் கை கொடுத்துத் தாங்கி நிற்கின்றனர்.


மேலும் விரைவில் இவர் முற்றாக குணமடைந்து பழைய கம்பீரமான தோற்றத்தோடு வரவேண்டும் என ரசிகர்கள் இறைவனைப் பிரார்த்தித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement