• Oct 16 2024

VJ சித்ரா வழக்கில் திடீர்த் திருப்பம்... உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு... உண்மை வெளிச்சத்துக்கு வருமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜே சித்ரா பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் தான் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டார். அதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் இன்று வரை ரசிகர்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்து வருகிறார்.


மேலும் ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இப்படியான சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்த நிலையில் சித்ரா மீட்கப்பட்டார்.


இவர் இறந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இவருடைய இழப்பு ரசிகர்களை இன்றுவரை மிகவும் வாட்டி வருகின்றது. அத்தோடு  இவர் இறந்த அன்று இதுதான் நடந்தது என்று பல பேர் பலவிதமான பேட்டிகள் கொடுத்து வந்தாலும் உண்மையில் சித்ராவின் கடைசி நிமிடங்கள் என்ன என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது. அதாவது சித்ராவின் மறைவு எதனால் நடந்தது என்பது இதுவரைக்கும் சரியாக கண்டறியப்படவில்லை. 

இதனையடுத்து இவரின் உயிரிழப்புத் தொடர்பான வழக்கானது சீரியல் போலவே நீண்டு கொண்டு சென்ற வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கை விரைவில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த வழக்கின் விசாரணையை 6மாதங்களில் முடிக்குமாறு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் ஏற்கெனவே சமீபத்தில் சித்ராவின் தந்தை இந்த வழக்கை சென்னைக்கு மாற்றி விரைவில் முடிக்குமாறு கோரிய மனுவினைத் தொடர்ந்தே உயர்நீதிமன்றம் இந்த முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் சித்ரா எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த உண்மை இந்த 6மாதத்திற்குள் வெளிச்சத்திற்கு வருமா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement