• Aug 15 2025

கறுப்பு சேலையில் விஜய் டிவி பிரியங்கா....! இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்....!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தனது தனித்துவமான தொகுப்பு  மற்றும் நகைச்சுவை உணர்வால், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள இவர் தற்போது விஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ மற்றும் ‘ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா’ எனும் இரண்டு பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.


சமீபத்தில் தனது காதலரான வசியுடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இவர்களின் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின், கணவருடன் இருக்கும் தருணங்களைப் பகிர்வது வழக்கமாகியுள்ளது.


இந்த நிலையில், தற்போது கறுப்பு நிற சேலையில் அலங்கரித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. நேர்த்தியான மேக்கப்பும், அழகான நகைகளும் இணைந்து, அவரின் அழகை மேலும் அதிகரித்துள்ளன. "நான் என் ஃபேவரிட் கலர்ல... கறுப்பு!" என்ற கிளியர் கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.





Advertisement

Advertisement