சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் ஷோரூமுக்கு திடீரென ரோகிணி வருகிறார்.. அங்கு மனோஜும் சந்தோஷும் டிவோஸ் கேஸ் பற்றி கதைக்கிறார். மேலும் மலேசியா மாமா சாட்சி சொல்ல வருவதை பற்றியும் கூறுகிறார்.
அதனை ரோகிணி கேட்டு விடுகிறார். ஆனால் மனோஜிடம் நான் எதுவும் கேட்கவில்லை என கூறுகிறார்.
மற்றொரு பக்கம், ரவி ஸ்ருதியின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்கிறார். ஆனால் ஸ்ருதி தெளிவாக ஒரு கண்டிஷன் வைக்கிறார்.
“இப்போ நீ என் ரெஸ்டாரண்டில் வேலை செய்யலாம். ஆனால் நீத்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் மீண்டும் வீட்டுக்கு வருவேன்” எனக் கூறுகிறார்.

இந்த விஷயத்தை வீட்டுக்கு வந்து ரவி அனைவரிடமும் சொல்கிறார். அதே நேரத்தில், ரோகிணி ஷோரூமுக்கு வந்தது மற்றும் அங்கு நடந்த உரையாடலையும் மனோஜ் கூறுகிறார். இதனால், “அப்படின்னா நம்ம பிளான் ரோகிணிக்கு தெரிஞ்சிருக்கும்” என அனைவரும் மனோஜை திட்டுகிறார்கள்.
இதற்கிடையில், செல்வம் ஜாமினில் வெளியே வருகிறார். ஆனால் அங்கு வந்த அருண், “நீ எப்படி வண்டி ஓட்டுறன்னு நான் பார்க்கிறேன். உனக்கு லைசென்ஸ் கிடைக்க விடமாட்டேன் ” என்று எச்சரிக்கிறார். இதனால் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீதியில் நின்று கதறி அழுது புலம்புகிறார்கள்.
இறுதியில், மனோஜின் டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. அங்கு ஸ்ருதியும் ஆஜராகிறார். அதே சமயம், ரோகிணியும் வந்து விஜயாவிடம் கிண்டலாக பேசுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
Listen News!