• Aug 12 2026

சீரியல் நடிகர் நேத்ரனுக்கு கேன்சர் பாசிட்டிவ்.. ஐசியூவில் அப்பா இருப்பதாக மகள் வெளியிட்ட வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் வில்லனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் நேத்ரன். இவர் ரியாலிட்டி ஷோ மற்றும் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். நேத்ரனின் மனைவி தீபாவும் நடிகையாக இருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்மார் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலில் அவருடைய மகள் அபிநயாவும் நடித்திருந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக  காணப்படுவார்.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டி என நேத்ரனின் மகளும் நடிகையுமான அபிநயா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளனர்.

அதில் அவர் கூறுகையில், என்னுடைய அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ் ஆகியுள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தற்போது அவர் ஐசியூவில் இருக்கின்றார். கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல்நிலை மோசமாக காணப்படுகின்றது.


இந்த விஷயத்தை இணையத்தில் பதிவிடுவதா? வேண்டாமா? என்ற சந்தேகம் இருந்தது. நோய் குறித்து பதிவிடப்படுவதால் நான் விமர்சிக்கப்படுவேனா என நினைத்தேன். இருந்தும் என்னுடைய எண்ணத்தை புறம் தள்ளி இதனை பதிவு செய்கின்றேன்.

என்னுடைய தந்தை குணமாவதற்காக எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதலுக்காகவே நான் இதை பதிவிடுகின்றேன். அவர் குணமாகி முன்பை விட வலுவாக மீண்டு வர வேண்டும். அவருக்காக எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொள்வேன்.  ஒருபோதும் கைவிடவும் மாட்டேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement