• Apr 27 2024

இந்த வாரம் OTT யில் வெளியாகப்போகும் திரைப்படங்கள்... மக்கள் மகிழ்ச்சியில்....

ammu / 1 year ago

Advertisement

Listen News!

கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகும் எண்ணிக்கை அதிரடியாக  அதிகரித்துவிட்டன. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத சினிமா பிரியர்களுக்கு இந்த ஓடிடி தளங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் ஒன்றாக மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம், பாலைய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் மலையாளத் திரைப்படமான தங்கம் இந்த வாரம் ஒடிடியில் வெளியாக உள்ளது.


இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.


2019ம் ஆண்டு வெளியான வலைத் தொடர் இருதுருவம். ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருதுருவம் 2 புதிய தொடர் பிப்ரவரி 24 முதல் Sony LIV வெளியாக உள்ளது.


வீரசிம்ஹா ரெட்டி என்ற திரைப்படம் கோபிசந்த் மலினினி இயக்கத்தில், தமன் இசையில், புஷ்பா தயாரிப்பாளர் மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதில், வீரசிம்ஹா ரெட்டி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23ந் தேதி வெளியாகி உள்ளது.


இந்தியாவின் தங்கத் தலைநகரான திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் தங்கம். இத்திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22ந் தேதி பிரைம் வீடியோவில் வெளியானது.


வீ ஹேவ் எ கோஸ்ட் பிப்ரவரி 24ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இதில், ஜெனிஃபர் கூலிட்ஜ் மற்றும் அந்தோனி மேக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பேய் வீட்டை ஆக்கிரமித்து வேட்டையாடுகிறது. இதில் இருந்த அந்த குடும்பம் எப்படி தப்பித்தது என்ற திகில் கதையுடன் இந்த படம் இருக்கிறது.


லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் கடந்த மாதம் 19ந் தேதி வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23ந் தேதி வெளியானது.






Advertisement

Advertisement

Advertisement