• May 25 2026

மீண்டும் இரட்டை வேடத்திலா? வெளியான சர்தார்-2 அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்திருந்த இந்த படம், கதையம்சம் மற்றும் திரைக்கதை காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த உள்ளார். 

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ திரைப்படம், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement