• May 25 2026

குற்றவாளிகளுக்கு இடமில்லை.. பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அதிரடி முடிவெடுத்த முதல்வர்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், தமிழக காவல்துறை உயரதிகாரிகள், காவல்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பிற கடுமையான குற்றச்செயல்களை தடுப்பது குறித்து முக்கியமாக பேசப்பட்டது. குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர் விஜய், கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக துரிதமாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், விசாரணைகள் விரைவாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன், குற்றச்செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவோரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் வகையில் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த கூட்டம் மாநிலத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மேம்படுத்தும் நோக்கில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement