தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி அமைத்து வருகின்றார். அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே பல முக்கிய முடிவுகளையும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
எனினும், நாட்டில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் விஜய் தலைமையிலான ஆட்சிதான் காரணம் என சிலர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் பிக் பாஸ் தமிழ் மூலம் பிரபலமான நடிகை ஜூலி, விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகவும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்ட வீடியோவில்,

ட்விட்டர்ல ட்வீட் போடுறதுக்காகவா மக்கள் ஆட்சியில உட்கார வச்சாங்க? எங்க அண்ணன் ஆக்ஷன் ஹீரோனு நம்பிதான் ஓட்டு போட்டாங்க. இப்படி கை விரிச்சு காட்டுறீங்க. எங்க அண்ணன் தப்பு பண்ணா நாங்கதான் ஃபர்ஸ்ட் கேப்போம், நாங்கதான் ஃபர்ஸ்ட் குரல் கொடுப்போம். ஆனா இப்ப எங்க அந்த குரல்?
10, 12 நாளா ஆட்சியில இருக்கீங்க… ஆனா எங்க பார்த்தாலும் மரண ஓலம்தான் கேட்குது. கோயம்புத்தூர்ல 10 வயசு குழந்தையை பாலியல் வன்கொடுமை பண்ணி கொலை பண்ணிருக்காங்க. பீச்சுக்கு போன குழந்தை உயிரிழந்துருக்கு. செவிலியர்கள் போராட்டத்தில இருக்காங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்லணுமே?
மக்கள் உங்களை நம்பிதான் ஓட்டு போட்டாங்க. பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு எல்லாத்துக்கும் நீங்க பொறுப்பு எடுத்துக்குவீங்கனு நம்பினாங்க. இப்ப வெளிய வந்து மக்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க.. என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், சோஷியல் மீடியால ரீல்ஸ் போட்டா மட்டும் போதாது. களத்துக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் சொல்லணும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்கன்னு சொல்லணும்,.. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!