• Jul 27 2026

அரசு தலையிடவில்லை என்றால் ஆபத்து உறுதி.. முதலமைச்சரை எச்சரித்த நடிகர் விஜய் சேதுபதி.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தற்போது திரையுலகில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது அவர், தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய் அவர்களிடம் முக்கியமான கோரிக்கையையும் முன்வைத்தார்.


அவர் பேசியதாவது, “கமல் சார் கேட்டுக்கொண்டது போல, தமிழக அரசே ஒரு ஓடிடி தளத்தை தொடங்க வேண்டும். அது சிறிய தயாரிப்பாளர்கள் முதல் பல கலைஞர்கள் வரை மிகவும் உதவியாக இருக்கும். திடீரென ஓடிடி சந்தை உருவாகி வேகமாக வளர்ந்தது. ஆனால் தற்போது அந்த சந்தை சரிவை சந்தித்துள்ளது. இதனால் திரைப்படத் துறையில் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.” என்றார்.

மேலும் அவர், திரையரங்க டிக்கெட் விலைகள் குறித்தும் தனது கருத்தை பகிர்ந்தார். “பல ஆண்டுகளுக்கு முன்பே டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டன. இப்போது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில் டிக்கெட் விலைகளை மேலும் உயர்த்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

திரைப்படத் துறையின் தற்போதைய நிலையை நேரடியாக எடுத்துரைத்த அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement