நடிகர் மம்முட்டிக்கு கேரளாவின் Mahatma Gandhi University சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் மம்மூட்டி, பல தசாப்தங்களாக மலையாளம் மட்டுமன்றி இந்திய திரைப்பட உலகிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், பல தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘களம்காவல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலில் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து மோகன்லால் உடன் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ‘மட்டஞ்சேரி மாஃபியா’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில், சினிமாவுக்கான அவரது நீண்டகால பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. இந்த விருதை தமிழக ஆளுநர் Rajendra Arlekar வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மம்மூட்டி, “என் அப்பா நான் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக சினிமா மூலம் மக்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறேன். என் இறுதி மூச்சுவரை அதைத் தொடர்வேன்.” என்று உணர்ச்சிகரமாக பேசியது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Listen News!