• Jun 15 2026

சாய் அபயங்கரை மிரள வைத்த VM மகாலிங்கம்… ‘கருப்பு’ பாடல் எப்படி உருவானது தெரியுமா?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

R. J.பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் கடந்த மே 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை Dream Warrior Pictures தயாரித்துள்ளது. படம் வெளியானதிலிருந்து அதன் பாடல்கள், பின்னணி இசை மற்றும் கிராமத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன.


இந்நிலையில், “கருப்பு” படத்தின் தொடக்க பாடல் குறித்து பாடகர் VM மகாலிங்கம் பகிர்ந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், “கருப்பு பாடலின் ஆரம்பத்தில் நான் பாடியது எங்கள் ஊர் தெய்வங்களை பற்றியது. 

'வேலாயுதம், பறவைக்காளி மலையாள கருப்பா, சந்நியாசி முன்னாடி பேச்சியம்மா, மாங்கல்ய காளி, தண்ணீமார்கள் வைராவி மாரியம்மா, பூமாரி காமாட்சிக்கு ஒரு தரம் அழகிய பொன்னரி, அடிமுறை காளி பாண்டிமுனி, எங்க பதினெட்டாம்படி கருப்பா’ என்ற வரிகளை சும்மா பாடினேன். அதை கேட்ட சாய் அபயங்கருக்கு மிகவும் பிடித்து, இதையே பாடலாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.” என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நாட்டுப்புற தெய்வங்களின் பெயர்களை இயல்பாக இணைத்த விதம் பாடலுக்கு தனித்துவமான உணர்வை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement