• Jul 27 2026

தியாகம் செய்த முத்து.. மீனாவின் முட்டாள் முடிவு? குடும்பத்தையே உலுக்கிய புதிய திருப்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

 ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து தனது கார் மற்றும் வேனை விற்க முடிவு செய்கிறார். அதற்கு மொத்தமாக ஏழரை லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என முத்து யோசிக்கிறார்.

மற்றொரு பக்கம் ரவி, தன் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஸ்ருதியுடன் பேசுகிறார். அப்போது ரெஸ்டாரண்ட் வைத்து வங்கியில் கடன் (Loan) எடுக்கலாமா என  கேட்க, அவர் “முயற்சி செய், நம்மால் முடிந்ததை செய்வோம்” என்று ஆதரவு அளிக்கிறார்.

ஆனால் மீனா, யாரும் சொன்னதை கேட்காமல் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்கிறார். பலரும் “நீங்கள் வந்த பிறகுதான் நன்மை ஏற்பட்டது” என்று கூறினாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். பின்னர் முத்து வந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்; ஆனால் அவர் கேட்கவில்லை.


இதற்கிடையில் சுவேதா, சங்கத்தின் உதவியால் டியூஷன் எடுத்ததாகவும், ஒரு மாணவி நல்ல மதிப்பெண் பெற்றதாகவும் கூறுகிறார். சிந்தாமணி இருந்தால் டியூஷன் கூட நடத்த விடமாட்டார் என்றும் தெரிவிக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் முத்து ராஜினாமா கடிதத்தை பிடுங்கி கிழிக்கிறார்.

இறுதியில் விஜயா, “நான் வேலைக்கு போகிறேன்” என்று கூறுகிறார். ஆனால் என்ன வேலை என்று பார்வதி கேட்க, அவர் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இதுவே இன்றைய எபிசோடின் நிறைவு.


Advertisement

Advertisement