தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர். கடந்த வருடம் அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவர் நடித்துள்ள கடைசி படைப்புகளில் ஒன்றான ‘ஈகோ ராமன்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கருடன் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன் ராஜ் மற்றும் லதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் ரோபோ சங்கர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, படத்தின் கடைசி 15 நிமிடங்களில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிபூர்வமான நடிப்பு ரசிகர்களை கண்கலங்க வைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது மனைவி பிரியங்கா அளித்த உருக்கமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “மருத்துவமனையில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த அவரை பார்த்தபோது, அவர் அமைதியாக போக மாட்டேன் என்று சொல்லுவது போல இருந்தது. ‘ஈகோ ராமன்’ படத்தில் அவர் நடித்த விதம் அதை உணர்த்துகிறது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்,” என அவர் கண்கலங்க தெரிவித்துள்ளார்.
Listen News!