இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பாரம்பரியமான தேநீர் விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் புதிய அரசியல் அலை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆளுநரின் அலுவலகத்தால் அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி முன்பும் விஜய்க்கு இத்தகைய அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக ஆகியவை ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்த்து, இவ்வருட தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. இந்நிலையில், தவெக விருந்து விருந்தில் பங்கேற்குமா அல்லது புறக்கணிக்குமா? என்பது தற்போது மாநில அரசியலில் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
அரசியலில் புதிய பாதையை உருவாக்கி வரும் விஜய் மற்றும் தவெக கட்சி, இந்நிலையில் எவ்வாறு பதிலளிக்கப் போகின்றனர் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விருந்தில் பங்கேற்கும் முடிவா, இல்லையா என்பதை எதிர்வரும் நாட்களில் கட்சி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!