2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இந்தி நடிகை, அதே வருடம் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக முத்திரை பதித்தார். ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்கப்படாத இவர், 2018-ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே வலுவான கவனத்தை ஈர்த்தார்.
இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரமும், அவருடைய எளிமையான மற்றும் கவர்ச்சியான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் பின்னர், அதே ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் காட்டிய நேர்மையான செயல்பாடுகள், உணர்ச்சிப்பூர்வமான பொழுதுபோக்குகள் மூலம் பெரும் ரசிகர் ஆதரவைப் பெற்றார்.
இப்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் நடத்திய ஒரு அழகான போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்று வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமன்றி பல பிரபலங்களும் இந்த போட்டோஷூட்டுக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!