தெலுங்குத் திரைப்படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு பிறகு ஸ்டார் நட்சத்திரமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்..
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு, தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல், மிக எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து அறிமுகமான விஜய் தேவரகொண்டா இன்று ஜொலித்து வருகிறார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'லைகர்' படம் சமீபத்தில் வெளியானது.ஆனால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்த்தையே கொடுத்தது இப்படம்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த வித்தியசமான சட்டையை ரசிகர்கள் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
Greg Lauren என்ற பிராண்டின் வெவ்வேறு துணிகள் சேர்ந்ததுபோல் இருந்த சட்டை விலை மட்டும் ரூ. 69,000 என்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டவர்கள் இந்த ஆடைக்கு இவ்வளவு பணமா என ஆடிப்போயிட்டார்களாம்.
Listen News!