• Nov 23 2024

முதன் முதலில் ஒரு லேடி கேங்ஸ்டர் படம்.. காஸ்ட்யூமை பார்த்து ஷாக் ஆன சன்னிலியோன்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

பொதுவாக கேங்ஸ்டர் படம் என்றாலே முழுக்க முழுக்க ஆண்கள் தான் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருப்பார்கள் என்ற நிலையில் முதல் முதலாக இந்திய திரை உலகில் லேடி கேங்ஸ்டர்  குறித்த படம் வெளியாக உள்ளது. அந்த படம் தான் ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் உள்பட பலர் நடித்துள்ள ‘கொட்டேஷன் கேங்’. இந்த படத்தை விவேக் குமார் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

 இந்த படத்தின் கதையை கொரோனா வைரஸ் லாக்டவுன் சமயத்தில் எழுதியதாகவும், தான் கதை எழுதிய போது இந்த படத்துக்கு வித்யா பாலன், பிரியாமணி, ஜாக்கி ஷெராப் ஆகியோர்களை யோசித்து வைத்திருந்தேன் என்றும் ஆனால் முக்கியமான கேங்ஸ்டர் கேரக்டருக்கு சன்னி லியோனை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன் என்றும் இயக்குனர் விவேக் தெரிவித்தார்.

சன்னி லியோனிடம் கதையை சொன்ன போது ’எனக்கு இந்த கேரக்டர் பொருந்தும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஓகே’ என்று கூறியதாகவும் அதன் பின்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் தெரிவித்தார்.



’சைவம்’ ’தெய்வத்திருமகள்’ போன்ற படங்களில் நடித்த பேபி சாரா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் அதேபோல் ஜாக்கி ஷெராப், பிரியாமணி ஆகிய இருவரும் போட்டி போட்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றும் இயக்குனர் விவேக் கண்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ரியல் லேடி கேங்ஸ்டர்களை பற்றிய கதையை படித்தேன், அந்த புத்தகத்தின் கதைக்கும், என்னுடைய படத்திற்கும் சம்பந்தமில்லை என்றாலும் இது ஒரு லேடி கேங்ஸ்டர் படம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

நடிகை சன்னி லியோனிடம் அவருடைய காஸ்ட்யூமை காண்பித்து படம் முழுவதும் உங்களுக்கு இது போன்ற காஸ்ட்யூம் என்று சொன்னபோது அவர் ஷாக் ஆகிவிட்டார். உடம்பு தெரியாமல் முழுக்க கவர் பண்ணும் காஸ்ட்யூமா? என்று அவரே ஷாக் ஆகிவிட்டார் என்றும் இயக்குனர் விவேக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement