• Apr 20 2024

சூரி ஹீரோவாக அசத்திய 'விடுதலை' படத்தின்.. திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'விடுதலை'. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 


அத்தோடு விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் இப்படத்தினுடைய கதைக்களம் பற்றிப் பார்ப்போம். அருமபுரி என்ற காட்டில் உள்ள கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனம் மும்முரமாக ஈடுபட தயாராகின்றது. அந்த நேரத்தில் இங்கே கனிம வளங்களை எடுக்கக் கூடாது என மக்கள் இதனை எதிர்த்து போராடுகின்றனர். 

மேலும் இந்தப் போராட்டத்தின் தலைவனாக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல போராடும் மக்களை அடக்கி ஒடுக்க வன்முறையை கையில் எடுக்கிறது போலீஸ். இரக்கமற்ற உயர் போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் இருக்கின்றார். இரக்கமற்ற இந்த போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள ஒரு கான்ஸ்டபிளாக இருக்கிறார் நடிகர் சூரி. 

போலீஸ் ஆபிசரான சூரி மக்களுக்கு எப்படி உதவுகிறார் கடைசியில் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா? இப்போராட்டம் எப்படி முடிகிறது என்பதுதான் இந்த படத்தின் உடைய மீதிக்கதை.


படம் பற்றிய அலசல் 

இப்படம் மூலமாக வெற்றிமாறன் இயக்கத்தில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கின்றார் விஜய் சேதுபதி.

அதேபோல் இரக்கமுள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஆபிஸராக ரசிகர்களின் மனதை நெகிழ வைக்கிறார் சூரி. 

அதுமட்டுமல்லாது இரக்கமற்ற உயர் அதிகாரியாக கௌதம் மேனன் திறமையான நடிப்பை அசத்தலாக வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் அச்சு அசலாக பழங்குடியின பெண்ணாக மாறி அப்படியே வாழ்ந்து காட்டியுள்ளார் நடிகை பவானி.

இப்படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசை மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.


தொகுப்பு 

இயக்குநர் வெற்றிமாறன் வழக்கமாக தன்னுடைய படங்களில் இருப்பது போல காதல், ஆக்ஷன், எமோஷன் என அனைத்து வகையான உணர்ச்சிகளும் கலந்த படைப்பாக விடுதலை படத்தை கொடுத்துள்ளார். கூடவே டாக்குமென்ட்ரி ஃபிலிம் போல இந்த படத்தை கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனவே 'விடுதலை' படமானது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு கதையம்சத்தை கொண்டதாக அமைந்திருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement