• Jan 18 2025

4-வது திருமணத்திற்கு ரெடியாகிய வனிதா.. ஆனாலும் ரசிகர்களுக்கு கிடைத்த ட்விஸ்ட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் சர்ச்சைகளின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாட்டால் மீடியாவுக்கு முன் பேசத் தொடங்கினார். அதில் தொடங்கி தனது திருமண வாழ்க்கை குறித்தும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் வனிதா. அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். எனினும் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து 2000 ஆண்டு நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர் தான் விஜய ஹரி, ஜோவிகா. ஆனாலும் அவரை விவாகரத்து செய்தார்.


அதன்பின்பு ஆனந்த் என்ற தொழில் அதிபரை மணந்தார். அவருக்கு பிறந்தவர் ஜெயனிதா. இதற்கிடையில் விஜய ஹரியை தனது தந்தையுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. இதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகின்றார். ஆனால் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த ஜோவிகா தனது அம்மாவுடன் வசித்து வருகின்றார்.


இதை அடுத்து மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா விஜயகுமார். அதாவது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் விட்டு பிரிந்தார். அவர் உயிரும் இழந்தார்.

இதைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கையில் தனது கவனத்தை செலுத்தி வாழ்ந்தார். அத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோவிகாவையும் ஹீரோயின் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், வனிதா விஜயகுமாரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு அடுத்த திருமணம் எப்போது எனக் கேள்வி எழுப்ப, எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார் வனிதா.

இதன் மூலம் வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடக்கும். அதற்கு அவர் ரெடியாகி விட்டாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement