• Jan 18 2025

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் கிசுகிசு..திருமண தகவல்கள் வைரல்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாகவும், இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலர்கள் என கூறப்பட்டாலும், இதுவரை உறுதிப்படுத்தியதில்லை.


அடிக்கடி ஒன்றாகக் காணப்படும் இவர்கள், சமீபத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் ஸ்கிரீனிங்கில் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடன் ராஷ்மிகா கலந்து கொண்டது, இந்த வதந்திகளை மேலும் பலப்படுத்தியது. இதனால், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இருவரின் உறவைத் தொடர்ந்து பரவசத்துடன் பேசிவருகின்றன.

சென்னையில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தொகுப்பாளரின் கேள்விக்கு ராஷ்மிகா மறைமுகமாக விஜயுடன் உறவை ஒப்புக்கொண்டதோடு, விஜய் தேவரகொண்டாவும் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக முன்பே ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


விஜய் தேவரகொண்டா தற்போது கௌதம் தின்னனூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்போதைய முறையான திட்டங்களை முடித்த பிறகே, அவர்களது திருமணம் பற்றிய தகவல்கள் வெளிவரும் என தொலைகாட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின்றன.


ராஷ்மிகா தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். ஆனால் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் பெரும் வெற்றி படங்களைப் பெறாததால், தனது மார்க்கெட்டை மீட்டெடுக்க முயற்சியில் உள்ளார்.ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் தொடர்ந்தாலும், இருவரும் இதுவரை காதல் அல்லது திருமணம் குறித்த எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement