தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக வெளியான தகவல்களின் பின்னணியில், விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரு தயாரிப்பாளரின் மகன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழும் திரிஷா, தற்போது 42 வயதானாலும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார்.
இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக கார் பயணம் செய்ததாகவும், சில பிரபலங்களின் திருமண விழாக்களில் கலந்து கொண்டதாகவும் கூறப்படும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
மேலும், சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த உறவை துண்டிப்பதாக பலமுறை உறுதி அளித்தும் அவர் அதிலிருந்து விலகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால் விவாகரத்து வழங்கவும், ஜீவனாம்சம் வழங்கவும், மேலும் நீலாங்கரை வீட்டில் வாழ அனுமதி தரவும் என அவர் மனுவில் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில், நாங்க விஜய் கட்சி கூடவும் கூட்டணி சேருவோம்.. நாங்க விஜய்க்கு ஆதரவு தருவோம். மக்கள் ஓட்டு போட்டா விஜய் வரலாம். ஏன் அவர் வரக்கூடாதா, வரட்டும்.
தமிழுக்கும் தமிழன் நலனுக்கும் எதிரா இருக்க கட்சிகள நார் நாரா கிழிப்போம். தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளனும். விஜய் - சங்கீதா அது அவங்களுக்கு உள்ள இருக்குற பிரச்சினை. அத எதுக்கு நீங்க தோண்றுகிறீர்கள்..
அடுத்தவன் பொண்டாட்டி பத்தி நீ ஏன் கிளறுற. விஜய் சக்காளத்தி கூட வச்சு பாரு. உனக்கு எங்கடா வலிக்குது. அவன் அவன பத்தி தோண்டுனா ஆயிரம் விஷயம் வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!