தமிழ் சினிமா உலகில் புதிய பாதையை உருவாக்கி வரும் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி, சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் தனது சினிமா வாழ்க்கை, கஷ்டங்கள் மற்றும் ஹீரோவாக மாறிய பின்னணியைப் பற்றி உண்மையான வெளிப்பாடுடன் பகிர்ந்துள்ளார்.

இசை மற்றும் நடிப்பு உலகில் எதிர்கொண்ட போராட்டங்களை திறந்த மனதோடு கூறிய விஜய் ஆண்டனி, " நான் நடிக்க வந்ததுக்கு பின்னாடி ஒரு பெரிய காரணமே இருக்கு. ஒரு வேளை நான் அனிருத் மாதிரி இருந்திருந்தால் யாரும் எதுவும் கேட்டு இருக்கமாட்டாங்க...
கொடுக்கிற டியூன வாங்கிட்டு போய் இருப்பாங்க. ஆனா நாம வளர்ந்து வருகிற இசையமைப்பாளராக இருந்ததால நிறைய குறுக்கீடு இருந்தது. அதனால கஷ்டப்பட்டு ஹிட் கொடுத்திட்டு இருந்தேன். அந்தப் போராட்டத்தால ரொம்ப சோர்ந்து போய்ட்டேன். அதனால ஹீரோ ஆகிட்டால் அதுல இருந்து தப்பிச்சிடலாம்னு ஹீரோ ஆனேன்..” என அனுபவித்த தடைகளைப் பகிர்ந்தார்.
இதன் மூலம் விஜய் ஆண்டனி இசை உலகில் வளர்ந்து வரும் போது, எதிர்கொண்ட குறுக்கீடுகள் அவருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தின என்பதை அறியமுடிகிறது.
Listen News!