• Apr 15 2026

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின்பு இப்படி மாறிட்டாங்களே.! வைரல் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழித் திரையுலகுகளிலிருந்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக அவர் தற்போது சினிமா துறையில் மிகப் பிஸியாக இருந்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆன்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் மோசமான தோல்வியை சந்தித்தது.

மலையாள திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷுக்கு, தமிழ் சினிமா முக்கிய ஆதரவாக அமைந்தது. ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அதனைத் தொடர்ந்து நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த வெற்றி அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.


பின்னர் ‘மகாநடி’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ், அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இன்று வரை சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.  

Advertisement

Advertisement