• Sep 17 2024

நடிகர் விஜயின் பிறந்தநாளில் தளபதி 67 குறித்து வெளியாகவுள்ள வீடியோ- குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடச்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய்.

இவர் தற்போது தளபதி-66 ல் நடித்து வருகின்றார்.அப்படம் முடியும் முன்பே தளபதி 67 படம் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

எனினும் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அறிவிப்பு விரைவில் வருமென தெரிவித்து இருந்தார்.

இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் அன்று வெளியாகவுள்ள அப்டேட்ஸ் குறித்து இப்போதே தகவல் கசிந்து வருகின்றது.

அதன்படி அவரின் பிறந்தநாள் அன்று எப்படி விக்ரம் படத்திற்கு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தார்களோ, அதேபோல் தளபதி 67 படத்திற்கு வெளியாகுமென கூறப்படுகின்றது.

மேலும் இந்த விஷயம் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement