• Sep 17 2024

பிரபல இயக்குநருடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி.. வெளியான டைட்டில்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி சாதனைகளை படைத்தவர்கள் பலர் உள்ளனர். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி.

முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது.அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.எனினும் இதனைத் தொடர்ந்து ஆதி தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் பாடி அசத்தி உள்ளார். பின் இவர் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் நடிகர் ஆனார்.

இந்நிலையில் ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரிக்கவுள்ளார். ஆதியே இசையமைக்கும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.

மேலும் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு வீரன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் புதிய அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement