• Apr 30 2024

லவ்டுடே படத்தின் சாய்ச்சிட்டாளே என்னும் பாடலின் வீடியோ ரிலீஸ்- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன்.இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து இவருடைய இயக்கத்தில் இவரே நடித்து வெளியாகிய திரைப்படம் தான் லவ் டுடே.இந்த படத்தில் சத்யராஜ், இவானா, யோகிபாபு, ராதிகா, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

லவ் டுடே திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.அத்தோடு தெலுங்கு ரசிகர்களும் பிரதீப்பை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இப்படத்தில் உள்ள சாய்ச்சிட்டாளே என்னும் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.அது வியூஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement