• May 18 2024

துணிவு’ படப்பிடிப்பை நிறைவு செய்து கெட்டப்பை மாற்றிய அஜித் ?- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வங்கி கொள்ளையை மையமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தினை எச்.வினோத் இயக்கியுள்ளதோடு அஜித் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்த படம் குறித்த தகவல்கள் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளதால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 


இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து தயாரிப்பு பணிகள் வேகமடைந்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் நடிகர் அஜித் புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். 


நீண்ட நாட்களாக நீளமான தாடியுடன் இருந்த அஜித், தற்போது கிளீக் சேவ் செய்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement