• May 05 2024

நாட்டு நாட்டு பாடலுக்கு ஸ்டெப் கற்றுக் கொடுத்த ராம் சரண்.. பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகக் திகழ்ந்து வருபவர் நடிகர் ராம் சரண். பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத படம் என்றால் அது 'ஆர்.ஆர்.ஆர்'.


அதாவது இப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைபடம் என்ற வெற்றியைப் பெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இப்படமானது ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததோடு, பல விருதுகளையும் இன்றுவரை தொடர்ந்து வென்று வருகிறது. 


அந்தவகையில் சமீபத்தில் கூட இப்படத்திற்காக கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்து படக்குழுவினரை பெருமையடைய செய்தது. அதுமட்டுமல்லாமல் உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்று இருக்கிறது.


இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரணை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவரிடம் நாட்டு நாட்டு பாடலின் பேமஸான ஹூக் ஸ்டெப்பை எவ்வாறு ஆட வேண்டும் என்பது குறித்துக் கற்றுக்கொண்டார்.


இந்த க்யூட்டான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா "நாட்டு நாட்டு பாடல் ஸ்டெப்பை கற்றுத்தந்ததற்கு நன்றி ராம்சரண். ஆஸ்கர் வெல்ல வாழ்த்துக்கள் நண்பா” என வாழ்த்தி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

அவரின் உடைய இந்த வீடியோப் பதிவானது மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, 50 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இன்னொரு முக்கிய விடயாம் என்னவெனில் ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு நடிகர் ராம்சரணும் ரிப்ளை செய்துள்ளார். 


அதாவது "ஆனந்த் ஜி நீங்கள் என்னைவிட அந்த நடன அசைவுகளை வேகமாக செய்தீர்கள். உங்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement