• May 03 2024

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோகன்.ஜி.. அடடே பெண்கள் பற்றி இப்படி சொல்லிட்டாரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. 


இந்நிலையில் இவர் தற்போது இவரின் இயக்கத்தில் 'பகாசுரன்' என்ற படம் உருவாகியுள்ளது. வருகிற 17-ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தில் நடிகர் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவரோடு இணைந்து நட்டி, மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


நல்ல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் இயக்குநர் மோகன்.ஜி அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் சமீபத்தில் பெண்கள் குறித்து இவர் பேசிய ஒரு விடயமானது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது அதில் அவர் கூறுகையில் "பெண்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் Profile புகைப்படங்களை அழகாக வைக்க வேண்டாம். அதை அப்படி வைப்பது தான் சில பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது" என்று பேசியுள்ளார். இவர் இப்படி பேசியுள்ளதை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் இதற்கு எதிராகப் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.  


Advertisement

Advertisement

Advertisement