• May 18 2024

மாதவன் வீட்டில் குவியும் தங்கம்.. சாதனை படைக்கும் மகன்.. வாழ்த்து மழையில் நனையும் குடும்பம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒரு நடிகர் காதல் மன்னனாக தோன்றி இளம் பெண்களின் கனவு நாயகனாக திரையுலகில் வலம் வருவது உண்டு. அந்தவகையில் ஜெமினி கணேசன், கமல் ஹாசன், அஜித், அரவிந்த் சாமியை தொடர்ந்து புது நூற்றாண்டில் பெண்களின் கனவு நாயகனாக வந்தவர் தான் நடிகர் மாதவன்.


அந்தவகையில் 'அலைபாயுதே' என்ற படத்தில் மாதவனின் கதாபாத்திரமும் அவருடைய தோற்றமும் பெண்களை கவரும் வகையில் வெகுவாக அமைந்திருந்தது. இதன் விளைவு ஒரே படத்தில் தமிழக பெண்களின் கனவு நாயகனாக மாதவன் மாறினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களால் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டு வந்தார். 


பெண்களின் மனதை கொள்ளை கொண்ட மாதவனுக்கு வேதாந்த் மாதவன் எனும் ஒரு மகன் இருக்கிறார். மாதவனின் மகன் வேதாந்த் இந்தியளவிலும், சர்வேதேச அளவிலும் நடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்று பல விருதுகளை வென்று வருகிறார்.


அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் மாதவன் மூன்று தங்க பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருக்கின்றார்.


இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் தந்தையான நடிகர் மாதவன். 


வேதாந்த்தின் சாதனையைப் பாராட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வேதாந்த் மாதவனுக்கும், அவரை ஊக்குவித்த குடும்பத்தினருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement