• May 05 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ -உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்பொழுது இயக்குநர் எச்.வினோத் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது.

வங்கி கொள்ளை தொடர்பான கதைக்களj்தை கொண்டதாகவே இப்படம் உருவாகி வருகின்றது.இந்த படத்தில் அஜித் இரு வேறு வேடங்களில் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத், சென்னை, தாய்லாந்து என இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மலையாள நாயகி மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சென்னை போன்ற சேட் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. பின்னர் விடுமுறையில் வெளிநாடு சுற்றுலா சென்ற அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின.

 இந்நிலையில் துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்  ரசிகர்களை அஜித் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அஜித்குமார் ஹூட்டிங் முடிந்த இரவில் தன் கேரவனைச் சுற்றி இருந்த ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ தான் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement