• May 18 2024

விஜய்யின் ''வாரிசு'' பட முதல் சிங்கிள் பற்றிய தகவல்- இன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தான் கமிட்டாகியுள்ளார்.

மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் வருகிற ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கில் இந்த வாரம் வெளியாகும் என  இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் பட விழாவில் கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் மகன் சஞ்சய் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தவாரம் வாரிசு அப்டேட் வரும் என்று கூறினார்.

இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அத்தோடு முதல் சிங்கிள் பாடல் ரிலீஸிற்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement