• Jul 27 2024

வெற்றிமாறன் - விமல் இணையும் ‘ம.பொ.சி’ : ஃபர்ஸ்ட்லுக்கே வித்தியாசமாக இருக்குதே?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் விமல் இணையும் படத்தின் அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ம.பொ.சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விமல் ஜோடியாக சாயாதேவி என்ற நடிகை நடிக்கும் இந்த  படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே என் ’கன்னிமாடம்’ என்ற படத்தை இயக்கிய நிலையில் இவர் இயக்கும் இரண்டாவது படம் ‘ம.பொ.சி’ என்பது குறிப்பிடத்தக்கது. 

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் ஏற்கனவே பல நல்ல தரமான படங்களை தயாரித்த நிலையில் தற்போது இந்த பத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் விமல் ஆசிரியர் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் விமலுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சித்து குமார் இசையில் உருவாகும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement