• Mar 09 2025

பழம்பெரும் நடிகை வையேந்தி மாலாவின் உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட பதிவு..!

Mathumitha / 23 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் சிறந்த நடிப்பினால் கவனத்தை ஈர்த்த வைஜெந்தி மாலா இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக விளங்கினார். அவர் 1949ம் ஆண்டில் வெளியான "வாழ்க்கை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிரபலமாக நடித்து "தேவதாஸ்" படத்தில் சந்திரமுகி கதாபாத்திரம் மூலம் இந்தியா முழுவதும் புகழைப் பெற்றார்.


மேலும் பரத நாட்டிய கலைஞராகவும் அறியப்படும் வைஜெந்தி மாலா பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்ப மருத்துவர் சமன்லால் பாலியுடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி அரசியலின் பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.


 91 வயதான நடிகை வைஜெந்தி மாலாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியுள்ள நிலையில் அவரது மகன் சுசீந்திர பாலி சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இதில் "வைஜெந்தி மாலா நன்றாக உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரைப்பற்றி பரவிய தகவல்கள் தவறானவை. செய்தியை பகிர்வதற்கு முன் சரிபார்க்கவும்" என்று கூறி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

Advertisement