தல அஜித்தின் தீவிர ரசிகன் ஆதிக் ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியான டிரெய்லர்கள் வரிசையில் 3.1 மில்லியன் பார்வைகளை பெற்றிருப்பதன் மூலம் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்ற டிரெய்லராக மாறியுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய 'விடாமுயற்சி' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் இந்த படத்திற்கு அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் காத்திருப்பை மேலும் தூண்டி வருகின்றது.இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவி புதிய அப்டேட் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதாவது "Teaser Theme" என்ற வீடியோ தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ அஜித்தின் பட "AI" போஸ்டருடன் இணைத்து வெளியிடப்பட்டு சில நிமிடங்களில் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மேலும் இப் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தற்போது ஒரு செய்தியை வழங்கியுள்ளார். அதாவது இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஃபர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் மாமேய்; சுட சுட ரெடி பண்ணிட்ருக்கோம்" என குறிப்பிடுள்ளார்.
Listen News!