• May 12 2024

என் பசங்கள பார்க்க வெயிட் பண்றேன்.. டிடி போட்ட ட்வீட்.. குழப்பித் தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகி உள்ள சந்தோஷ செய்தி அறிந்ததும் விஜய் டிவி தொகுப்பாளினியும் நயன்தாராவின் தோழியுமான டிடி நீலகண்டன்  தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

டிடி நீலகண்டன் நயன்தாராவின் நெருங்கிய தோழியாக நீண்ட காலம் ரொம்பவே நெருக்கமாக உள்ளார். விஜய் டிவியில் நயன்தாரா பேட்டி வர காரணமும் டிடி நீலகண்டன் தான் எனக் சொல்கின்றனர்.இவ்வாறுஇருக்கையில், நயன்தாரா இரு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவான செய்தி அறிந்ததும் முதல் ஆளாக வந்து டிடி நீலகண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த செய்தி உலகத்துக்கு தெரிய வர காரணமே டிடி நீலகண்டன் விஜய் டிவி பேட்டியில் கேட்ட அந்த கேள்வி தான். டிடி நீலகண்டன் கேட்டதுமே இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு நிச்சயம் ஆகி விட்டதென நெற்றிக்கண் படத்தின் புரமோஷனல் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அப்பா அம்மாவாக மாறியதை அறிந்ததும் டிடி நீலகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனின் ட்வீட்டை ரீட்வீட் செய்து வாழ்த்தி உள்ளார். டிடி நீலகண்டனின் ட்வீட் சற்றே சில நெட்டிசன்களை குழப்பியுள்ளது.



"Can't wait to seeeee my boysssssss Wishing Gods abundance of blessing on them forever forever VigneshShivN #Nayanthara Enter into the satisfying world of parenthood my darlings" என்னோட பசங்களை பார்க்க வெறித்தனமா வெயிட் பண்றேன் என டிடி நீலகண்டன் ட்வீட் போட்ட நிலையில், என்னது அவங்க இரண்டு பேரும் உங்களோட பசங்களா.. சொல்லவே இல்லை என நெட்டிசன்கள் குழம்பிப் போய் கமெண்ட் அடித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement