• May 10 2024

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- நல்ல வேளை விஜய் சேதுபதி நடிக்கல...

stella / 8 months ago

Advertisement

Listen News!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமானவராக இருந்தவர் முதத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது இவர் தான்.பலரும் அறிந்திடாத அவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மையமாக வைத்து 800 என்கிற திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீபதி இயக்கத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் தேவ் படேலின் அண்ணனாக நடித்த மதூர் மிட்டல் தான் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.இப்படத்தில் முத்தையா முரளிதரனாக முதலில் நடிக்க கமிட் ஆனது விஜய் சேதுபதி தான். இதற்காக லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஷூட்டிங் தொடங்க இருந்த நேரத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாசர், வேலராமமூர்த்தி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.இருப்பினும் இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

மேலும், படத்தின் மேக்கிங் ரொம்பவே சுமாராக உள்ளது என்றும் பிரபாகரனை காட்டும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், விஜய்சேதுபதி அந்த ரோலில் நடித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்திருக்கும் என ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement