• May 06 2024

நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன... அது என் விருப்பம்... கத்திய ஸ்ருதி ஹாசன்... காரணம் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் ஒரு பின்னணிப் பாடகியாகவே சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன்பின்னர் '7 ஆம் அறிவு, 3' போன்ற படங்கள் மூலம் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி ஹாசன் அதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.


முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தினைப் பிடித்து வந்த ஸ்ருதி 'லாபம்' படத்தின் உடைய தோல்விக்கு பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் வெப் தொடர்களில் நடித்து வருகின்றார்.

அதுமட்டுமல்லாது தன்னுடைய காதலனான சாந்தனு என்பவருடன் டேட்டிங் சென்றும் வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் சினிமா ஆரம்பப் பயணத்தில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது கிண்டலுக்கு ஆளாகியது. அதுமட்டுமல்லாது தற்போதும் அந்த விடயம் தலை தூக்கி இருக்கின்றது.


இந்நிலையில் சமீபத்தில் கோபத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதாவது மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை பற்றி கூறுகையில் "என்னை பற்றி நியாப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. என் உடலில் மாற்றம் செய்யக்கூடிய உரிமை எனக்கு இருக்கிறது.

என்னுடைய மூக்கி சற்று வித்தியாசமாக இருந்தால் அந்த சிகிச்சையை செய்து கொண்டேன். உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள். விருப்பம் இல்லாதவற்றை வற்புறுத்தலில் எதையும் செய்யாதீர்கள்" என்றும் கூறியிருந்தார்.


மேலும் "என்னுடைய சினிமா கேரியர் ஆரம்பித்த போது நடிகைக்கான தோற்றமே என்னிடம் இல்லை என்றும் வெளிநாட்டு பெண் போல் இருக்கிறார் தமிழ் பெண்போல் இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

ஆனால் பல படங்களில் நான் கிராமத்து ரோலில் தான் நடித்திருக்கிறேன். இது போல் கேலி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்" என்றும் கூறி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார் ஸ்ருதிஹாசன்.

Advertisement

Advertisement

Advertisement