• May 19 2024

சைலண்டாக பாலிவூட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் சிம்பு-அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம்  பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதற்காக சிம்பு வெகுவாக தனது உடல் எடையை குறைத்துக் கொண்டார்.

இதனை அடுத்து சிம்பு பத்து தல என்னும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இதையடுத்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதுதவிர வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த இரண்டு படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் இவர் பாலிவூட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அதுவும் பாடகராக, ஹிந்தியில் சட்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி உள்ள டபுள் எக்ஸ்.எல் என்கிற பாலிவூட் படத்தில் தான் சிம்பு ஒரு குத்துப் பாடலை பாடி உள்ளார். இப்படத்தில் வலிமை பட நாயகி ஹூமா குரேஷியும், லிங்கா பட நாயகி சோனாக்‌ஷி சின்ஹாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இதுதவிர சிம்புவின் நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்காக இப்படத்தில் இடம்பெறும் டாலி டாலி என்கிற பாடலை சிம்பு பாடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement