• May 04 2024

நயன்தாரா - விக்கியிடம் நேரடி விசாரணைக்கு அழைப்பு..? அமைச்சர் கொடுத்த விளக்கம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் பெரும்  சர்ச்சையாகி இருக்கும் நிலையில் அது பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்து இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் தெரிவித்ததாவது....



நயன்தாரா-விக்னேஷ் சிவன் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சட்டத்துக்கு உட்பட்டு நடந்ததா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்யும் பணியினை இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.

அத்தோடு  தமிழக சுகாதாரத்துறை சார்பில் இணை இயக்குனர் தலைமையில் 2 மகப்பேரு மருத்துவர்கள் என 3 பேர் கொண்ட குழு விசாரணைக்காக அமைக்கப்பட்டு உள்ளது. அலுவலக உதவியாளர் ஒருவரும் குழுவில் உள்ளார். விசாரணை நடக்கிறது. தேவையென்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து விசாரணை நடத்துவோம்

மேலும் இந்த விசாரணை பணி ஒருவாரம் நடக்கும். அதன்பிறகு சட்டம், விதிமீறல்கள் பற்றியும், விசாரணை நடத்தியவர்களின் விபரங்கள் பற்றியும் அறிக்கையாக அளிப்பார்கள். அதன்பிறகு உரிய விவரங்கள், தகவல்கள் வெளியிடப்படும். இந்த விசாரணை அறிக்கை வந்த பிறகே ஏதேனும் சட்டவிதிமீறல்கள் உள்ளதா? என்பது பற்றிய தகவல் தெரியவரும்.அத்தோடு  நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை விவகாரம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது'

இன்னும் ஒரு வார காலத்திற்குள் விசாரணை முடிந்து அறிக்கை கிடைத்துவிடுமென்றும் அவர்கள் சட்டத்தை மீறி இருக்கிறார்களா இல்லையா என்பது அப்போது தான் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement