• Oct 09 2024

இதுதான் அவங்களுக்கு நாம கொடுக்கிற தண்டனை... கண் கலங்கியவாறு சம்யுக்தா வெளியிட்ட பதிவு... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் 'சிப்பிக்குள் முத்து' சீரியல் மூலம் பிரபலமானார்கள். சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது காதலை ரசிகர்களுக்கு அறிவித்த இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அதாவது எட்டு மாதங்களாக காதலித்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.


அந்தவகையில் எதிர்பாராத விதமாக சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களது திருமண புகைப்படங்களை டெலிட் செய்து ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்தனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குவதை போல் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சம்யுக்தா அழுத வண்ணம் வெளியிட்டுள்ள வீடியோ ஆனது பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

அதாவது "பிரச்சினைகள் வருது என்றால் நாம கரெக்ட் ஆன வழியில் போய்ட்டு இருக்கோம்னு அர்த்தம், எதிர்ப்புக்கள் தான் நம்மள வெற்றியைத் தேடி ஓட வைக்கும்" என்ற விஜய்யின் டயலாக்கையும் அதில் இணைத்துள்ளார். அதுமட்டுமல்லாது "நாம செம்மையாய் வாழ்ந்து காட்டுறதுதான் நாம வாழக்கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்கிற தணடனை" எனவும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதனைப்பார்த்த ரசிகர்கள் "எதற்கும் கலங்காதீர்கள், உங்களுக்கும் இதை விட சிறந்த வாழ்க்கை அமையும்" என ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் சமீபத்தில் தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் சம்யுக்தா புதிய கார் ஒன்றினை வாங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement