• Sep 27 2023

நடிகர் பிரகாஷ் ராஜ்ஜைக் கைது செய்யக் கோரி... நீதிமன்றில் அதிரடிப் புகார்.. உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் பிரகாஷ்ராஜ் எந்தளவிற்கு சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றாரோ அந்தளவிற்கு அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதில் ஆர்வம் உள்ள ஒருவராக விளங்கி வருகின்றார். அதிலும் குறிப்பாக பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 


இந்நிலையில் இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன் 3 வருகிற 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் "விக்ரம் லேண்டர் மூலம் எடுக்கப்பட்டு நிலவில் இருந்து பூமிக்கு வந்த முதல் படம்" என தேநீர் ஆற்றும் நபர் ஒருவரின் படத்தை பகிர்ந்திருக்கிறார். 


இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் வேறொரு பதிவினையும் வெளியிட்டிருந்தார். அதில் "நான் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டது ஒரு பழைய ஆம்ஸ்ட்ராங் காலத்து ஜோக், அதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா?" என்று கேட்டுள்ளார். 


இருப்பினும் இந்த சர்ச்சை ஓயாத நிலையில் புதிய சிக்கல் ஒன்று பிரகாஷ் ராஜ்ஜிற்கு வந்துள்ளது. அதாவது சந்திரயானை கேலி செய்ததற்காக அவரைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி ஸ்ரீராம் சேனை ஊழியர்கள் போலீசாரிடம் தற்போது புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement