• Oct 09 2024

எதிர்பாராத டுவிஸ்ட்டுடன் முடிவுக்கு வரும் 'Sundari Serial'... இப்படி ஒரு சர்ப்பிரைஸ் இருக்கா... குஷியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள் புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி சீரியல் பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. 


அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கருமை நிறம் கொண்ட பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் அமைந்திருக்கின்றது. இதில் சுந்தரி என்ற பெண் அவளது கல்யாண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டப்படுகிறது.


இந்நிலையில் இந்த சீரியலானது தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.  இதனால் ரசிகர்கள் மிகவும் கவலையுடன் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் வகையில் தற்போது ஒரு குட்நியூஸ் வெளியாகி இருக்கின்றது.

அதாவது சுந்தரி சீரியலினுடைய அடுத்த சீசன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இதில் சுந்தரி கலெக்டர் கதாபாத்திரத்தில் வருவார் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. 

Advertisement