• May 05 2024

இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர்தான்- சமூக வலைத்தளங்களில் லீக்கான பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி தற்பொழுது இரண்டாவது வாரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத் தலைவராக ஜி.பி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வித்தியாசமான டாஸ்குகளுடன் சூப்பராக ஒளிபரப்பாகி வருகின்றது.

அத்தோடு இந்த வாரம் கட்டாயம் யாராவது ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார். அதன்படி இந்த நாமினேஷன் லிஸ்டில் அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.


இந்நிலையில் இந்த வார இறுதி நாளில் யார் வெளியேற போகின்றனர் என்பதை தெரிந்துகொள்ளும் ஓட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இதில்  கடந்த வாரம் ஜிபி முத்துவிடம் சண்டைப் போட்டு முதல் வாரத்தில் இருந்தே அவரை அழவைத்த தனலட்சுமி தான் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் நபராக வெளியேற வேண்டும் என ஜிபி முத்து ஆர்மியே போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில் தனலட்சுமிக்கு ஆதரவாக ஏகப்பட்டப்பேர் சப்போர்ட் செய்து அவருக்கு ஓட்டுக்களை வாரி குவித்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதில்லை.தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஓட்டிங் லிஸ்டில் சீரியல் நடிகை ரச்சிதா தான் அதிகம் ஓட்டை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடம் சீரியல் நடிகர் அசீம் பெற்றிருக்கிறார். 3-வது இடம் விக்ரமன், 4-வது இடம் குயின்ஸி, 5-வது இடம் ஆயிஷா பெற்றுள்ளனர்.


இதைத்தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. கடைசி இரண்டு இடம் விஜே மகேஸ்வரி, சாந்தி பெற்றுள்ளனர்.  சாந்தி தான் இந்த ஓட்டிங் லிஸ்ட் கடைசி இடம் பிடித்துள்ளதால் அவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement