• Mar 27 2023

வெற்றிமாறன் திரைப்படங்கள் ஹிட்டாவதற்கு இது மட்டும் தான் காரணம்- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடித்துள்ள நடிகர் மூணார் ரமேஷ், பிரபல          சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது விடுதலை செட்டில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். "இயக்குநர்ல இருந்து கடைசி ஆள் வரைக்கும் எல்லாருமே ரொம்ப சிரமப்பட்டோம். லொகேஷன் போய் சேருறதே பெரிய ரிஸ்க். கார்ல போய், காரில் இருந்து ஜீப்-ல போய், ஜீப்ல இருந்து ஃபோர் வீலர் ஜீப்-ல போய் அங்க இருந்து நடந்து, அந்த மாதிரி போனும். நைட்டுன்னா குளிரு, வெளிச்சம் இல்ல. அப்புறம் அட்டை, பாம்பு, பல்லி இப்படிப்பட்ட பிரச்சனைகள்.


காட்டுக்குள்ள காஸ்டியூம் மாத்தி, காட்டுக்குள்ளே சாப்பிட்டு, அங்கேயே மேக்கப் போட்டு எல்லாத்தையும் நம்ம தாங்கி அவர் சொல்றதை கேட்டு நடிக்குறது ஒரு பெரிய சவாலா இருந்துச்சு. ராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் காட்டுக்குள்ள இருந்து இறங்கி வரணும். அவ்வளவு குளிரு, வண்டியில் உட்கார முடியாது. ஃபுல்லா பாறையா இருக்கும். நம்ம நடந்து போறதை விட மெதுவா தான் ஜீப் எல்லாம் போகும். இதெல்லாம் ரொம்ப பயங்கரமான அனுபவம்.


சாதாரணமாவே படம் எடுக்கக் கூடாது, அப்படின்னு இருக்கிறவர் தான் வெற்றிமாறன் சார். மெனக்கெடல் இல்லாமல் ஒரு வேலையை செய்ய மாட்டார். ரொம்ப அதிக நேரம் வேலை செய்வார். அவரும் கஷ்டப்படுவாரு, மத்தவங்களும் கஷ்டப்படுவாங்க. அதனால தான் அந்த படம் அவ்ளோ பெரிய விஷயமா இருக்கு. அதனால தான், அவரு முதல் படத்திலிருந்து இப்போ வரைக்கும் அந்த வெற்றிகளையும், எதிர்பார்ப்புகளையும் தக்க வச்சிருக்கார்" என மூணார் ரமேஷ் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement